சந்தேக நபர்களின் நடமாட்டம்? விடிய விடிய நடந்த சோதனை - விழுப்புரத்தில் பரபரப்பு
சந்தேக நபர்களின் நடமாட்டம்? விடிய விடிய நடந்த சோதனை - விழுப்புரத்தில் பரபரப்பு
#electionswiththanthitv #election #thanthitv #villupuram #thanthitv #loksabhaelection2024
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதிகளில் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக அழைத்துவரப்பட்ட வெளியூர் ஆட்கள், தங்கவைக்கப்பட்டுள்ளனரா என தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
தங்கும் விடுதிகளில் உள்ள பதிவேடுகளில் புதியதாக அறை எடுத்து தங்கி உள்ளவர்களின் விவரம் அடங்கிய பட்டியல்களை ஆய்வு செய்த போலீசார், விடுதி ஊழியர்களிடமும் விசாரித்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறினால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பதுடன், தங்கும் விடுதி பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா? என்று விடிய, விடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் அரசியல் கட்சியினர் யாரேனும் பணம் பட்டுவாடா செய்கிறார்களா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.