சென்னை, நாவலூர் - தாழம்பூர் பழுதான சாலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்

x

சென்னை, நாவலூர் - தாழம்பூர் பழுதான சாலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்

சென்னை, நாவலூர் - தாழம்பூர் பழுதான சாலையில் மழை நீர் வடிகால் பாலம் அமைக்கும் பணி முடிவடையாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளுக்கு தந்தி டிவி செய்தி எதிரொலியால் தற்காலிக தீர்வு கிட்டியது...இருப்பினும் முழுமையாக சாலை சீரமைக்கப்படவில்லை.

இதனிடையே சாலை நடுவே அமைக்கப்பட்ட வடிகால் பாலம் அமைக்கும் பணிகளும் நிறைவடையாத நிலையில், வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அவ்வழியே வாகனங்களில் செல்லும் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதையடுத்து, திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி, பழுதடைந்த சாலையை சரி செய்யக் கோரி ஆட்சியரிம் கோரிக்கை வைத்ததுடன், அச்சாலையில் தண்ணீர் லாரிகள் அதிகளவில் செல்வதைத் தடுத்து நிறுத்த காவல்துறையினர் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்