4 பிள்ளைகளின் தாய்க்கு சல்லாபம்.. நடுரோட்டுக்கு வந்த கணவன் சடலம் - கதறும் குழந்தைகள்

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தச்சம்பட்டு அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், தமிழரசி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ள நிலையில், தமிழரசி அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்கிற சுரேஷுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாமோதரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, சுரேஷ் மற்றும் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது உறவினர்கள் சடலத்துடன் மணலூர் பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்....


Next Story

மேலும் செய்திகள்