ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்.. தம்பி மகனே செய்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை கொடுங்கையூரில் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் அன்பு, வேளாங்கண்ணி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அன்பு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல், அன்பு வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் அவரது மனைவி வேளாங்கண்ணி மட்டும் இருந்துள்ளார். அப்போது, வெளியே சென்றிருந்த அன்புவின் மகன், வீட்டிற்கு வந்து பார்த்த போது, தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேளாங்கண்ணியின் தம்பி மகன் அகஸ்டின், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது....