புது வீட்டில் கருகி கிடந்த தாய், மகன் - நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம் - கிருஷ்ணகிரியில் சோகம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பூட்டிய வீட்டில் இருந்து தீயில் கருகிய நிலையில், தாய், மகனின் சடலங்கள் மீட்கப்பட்டன.

போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்தில், பெரியதம்பி என்பவரது மகன் முருகேசன் என்கிற அன்பழகன், மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து, தனது தாய் ராஜம்மாளுடன் வசித்து வந்தார். புதிதாக கட்டிய வீட்டில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நண்பர்களுடன் பேசிவிட்டு அன்பழகன் தூங்கச் சென்றார். அன்பழகன் மற்றும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தீயில் கருகி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இருவரது சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் கொசுவை விரட்ட வைத்திருந்த லிக்யூட் கீழே விழுந்து உடைந்த சமயத்தில், அன்பழகன் பீடி பற்ற வைத்தபோது தீ பரவி எரிந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தடயவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்