வானில் திடீர் மாற்றம்.. பூமியை சுற்றப்போகும் 2வது நிலவு? - வெறும் கண்ணால் பார்க்கவே முடியாது

x

2024 PT5 என்று பெயரிடப்பட்ட அந்த சிறுகோள், வெறும் 33 அடி நீளம் கொண்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. இது பூமியின் ஈர்ப்பு விசையால் ஒற்றை சுற்றுப்பாதையில் இயங்கத் தொடங்கும் என்றும், 2024 PT5 சிறுகோள், அதன் அண்ட பயணத்தைத் தொடரும் முன்பாக, சுற்றுப்பாதையில் பயணிக்கும் என்றும் கூறப்படுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் ஈர்க்கப்படுவதைப் பார்ப்பது மிகவும் அரிது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2024 PT5 சிறுகோள், செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி அதன் சுற்றுப்பாதையில் ஈர்க்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக மினிநிலவாக செயல்படும் என்றும், சூரியனை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதைக்குத் திரும்புவதற்கு முன்பு சுமார் 56 நாட்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த சிறுகோளை வெறும் கண்களாலோ அல்லது தொலைநோக்கிகள் மூலமோ பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்