தமிழகத்தில் முதல்முறையாக சிக்கியது Money Mule கும்பல்.. மக்கள் ரத்தம் உறிஞ்சும் ஜோக்கர்கள்

x

சைபர் கிரைம் மோசடி கும்பல்களுக்கு, வங்கிக் கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்து உதவி வந்த money mule கும்பல்களை, போலீசார் முதன்முறையாக கைது செய்துள்ளனர்.

சைபர் கிரைம் மோசடி மூலம் கொள்ளையடிக்கும் பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் வைத்துக் கொண்டு, சைபர் கொள்ளையர்களுக்கு அனுப்பும் நபர்கள், money muleகள் என அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில், பார்சல் ஸ்கேம் மோசடியில் சிக்கிய சென்னை கொளத்தூரை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் சுருட்டியது. இதுதொடர்பான புகாரின் பேரில், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, அந்தப் பணம் பல்வேறு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 5 வாடிக்கையாளர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், இந்த பேரும், பலரின் பெயரில் வங்கிக் கணக்குகளை உருவாக்கி, அதனை சைபர் கிரைம் கும்பல்களுக்கு கொடுத்து, அதன் மூலம் கமிஷன் பெற்று வந்தது தெரியவந்தது. பின்னர் மோடிசயில் ஈடுபட்ட அசாருதீன், எபினேசர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜோக்கர் என்ற லிங்க் மூலம், தமிழகத்தில் ஏராளமான மணி மியூல் கும்பல்களை, சைபர் கிரைம் மோசடியாளர்கள் உருவாக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்