ஆளுநர்கள் மாநாடு.. பிரதமர் எக்ஸ் தளத்தில் சுவாரஸ்ய பதிவு | Modi

x

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், ஆளுநர்களுக்கான இரு நாள் மாநாடு இன்று தொடங்கியது. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். மாநாட்டில், பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட அனைத்து மாநில ஆளுநர்களும் மாநாட்டில் பங்கேற்றனர். ஆளுநர்கள் எவ்வாறு மாநில வளர்ச்சிக்கு உதவுவது, சமுதாயத்திற்கு பங்களிப்பது என்பது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்