"எந்நேரமும் செல்போன்" கண்டித்த பெற்றோர் - சிறுமி விபரீத முடிவு
எந்நேரமும் செல்போன் பார்த்துக்கொண்டே இருப்பதாக கூறி பெற்றோர் செல்போனை பிடுங்கியதால், 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகளான ப்ரதிக்ஷா.. தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவர் வீட்டில் எந்நேரமும் செல்போன் பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், படிப்பில் கவனம் செலுத்தக்கோரி ப்ரதிக்ஷாவிடம் இருந்து அவரது பெற்றோர் செல்போனை பிடுங்கியிருக்கின்றனர். இதனால், விரக்தியில் இருந்த ப்ரதிக்ஷா.. சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.