ATM-ல் பணம் எடுத்தால் கிடைக்கும் செல்போன்..வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Perambalur | Theft

x

பெரம்பலூரில் தனியார் வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்த நபர் கவனக்குறைவாக தவறவிட்ட செல்போனை, மற்றொரு நபர் எடுத்துச்சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெங்கடேசபுரத்தில் உள்ள ஏடிஎம்-ல், இரு தினங்களுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த பாலு என்பவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது தனது செல்போனை ஏடிஎம் இயந்திரம் மீது மறந்து வைத்து சென்ற அவர், திரும்பி வந்து பார்த்த போது செல்போன் காணாததால் அதுகுறித்து மேலாளரிடம் புகாரளித்தார். சிசிடிவி பதிவுகளை சோதித்ததில் பணம் எடுக்க வந்த நபர், செல்போனை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்