விவசாயிகளின் வயிற்று பசியை போக்கிய எம்.எல்.ஏ

x

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன் ஏற்பாட்டின்படி, விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த மாதம் மட்டுமல்லாமல், இனி நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்