பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான பணிப்பெண் தரப்பு, காவல்துறை தரப்பு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், வாதங்களை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்த காவல்துறை அவகாசம் கோரியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார். நாளை மறுநாளுக்குள் காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story