"முதல்வர் சொன்னதை கவனித்திருந்தால் ஈபிஎஸ்-க்கு தெரிந்திருக்கும்" - அமைச்சர் பதிலடி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் அரசின் செயல்பாட்டை, நிதிநிலையை மேம்படுத்த அமைக்கப்பட்டவை என்று கூறியுள்ளார். அவை நிர்வாகம் தொடர்பானவை என்றும், பொதுப் பார்வைக்கு வைக்கவேண்டியதில்லை என்பது முதலமைச்சராக இருந்தவருக்குத் தெரியாதா? என்றும் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் அளித்த பதிலுரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன? என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Next Story