முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 28ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக விவாதித்து அமைச்சர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், பிப்ரவரி 2வது வாரத்தில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்