"எப்பேர்பட்ட மனுஷன்.. இறந்துட்டாரா?’’ - 120 வயசுலயும் சொந்த கால்ல நிக்கிறவற ஏன் இப்படி பண்றீங்க?

x

"எப்பேர்பட்ட மனுஷன்.. இறந்துட்டாரா?’’ - 120 வயசுலயும் சொந்த கால்ல நிக்கிறவற ஏன் இப்படி பண்றீங்க?

தஞ்சையில் புகழ்பெற்ற "மிட்டாய் தாத்தா" உயிரோடு இல்லை எனப் பரவிய தகவல் உண்மையில்லை... அவை வெறும் வதந்தியே என அவரே வந்து சொல்லியிருக்கிறார். யார் இந்த மிட்டாய் தாத்தா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் "மிட்டாய் தாத்தா உயிரிழந்து விட்டதாக" ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.. இதைக்கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து கூட்டம் கூட்டமாக, மக்கள் "மிட்டாய் தாத்தா" என அழைக்கப்படும் "முகமது அபுசாலி"-யை அவரது வீட்டிற்கே சென்று பார்க்கத் தொடங்கியுள்ளனர். அப்போது தான், சோசியல் மீடியாக்களில் வெளியாக தகவல்கள் குறித்து அவருக்கே தெரியவந்திருக்கிறது. இதை அறிந்து மிட்டாய் தாத்தா மனமுடைந்து போயிருக்கிறார்.

இது குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், "தான் இறக்கவில்லை எனவும், நலமுடன் உள்ளேன் எனவும், சோஷியல் மீடியா தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி இருப்பதாகவும் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.. இதனால், யாரும் பயப்பட வேண்டாம்" எனவும் அவர் கூறியுள்ளார்...

இதனிடையே, இன்னும்.. "தான் மிட்டாய் விற்பதாகவும், அவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியாக செல்வதாகவும்" கூறியுள்ளார்..

முன்னதாக, பர்மாவில் வசித்த இவர், அங்கு ஏற்பட்ட போரில் தனது குடும்பத்தை இழந்து... சுமார் 50 வயதில் மீண்டும் தாய் நாட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்திருக்கிறார்.. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்த இவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே சென்றுள்ளார்..

இறுதியில், அங்கிருந்து தஞ்சாவூருக்கு வந்து தேங்காய் மிட்டாயில் தொடங்கி, குழந்தைகளுக்கான குளுக்கோஸ் மிட்டாய், இஞ்சிமரப்பா உள்ளிட்ட மிட்டாய் வகைகளை தயாரித்து விற்று வந்துள்ளார்.. இதனால் தான், இவருக்கு மிட்டாய் தாத்தா எனப் பெயர் வந்துள்ளது. யாரையும் எதிர்பார்க்காமல் குறைந்த வருமானம் ஈட்டினாலும், உழைப்பால் உயர்ந்த இவரது புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது பிற பகுதிகளிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது...

"உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, சுமார் 120 வயதை எட்டியபோதும், தனிமனிதராக.. தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திவரும், மிட்டாய் தாத்தா.. இளம்தலைமுறைக்கு சிறந்த உதாரணம்..


Next Story

மேலும் செய்திகள்