உருவமெடுத்த மிதிலி புயல்..பொதுமக்களுக்கு கொடுத்த வார்னிங்..
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மிதிலி புயலாக வலுப்பெற்று வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது...
இந்த புயலானது நவம்பர் 18ம் தேதி அதிகாலை வேளையில் வங்கதேசத்தின் மோங்ளா மற்றும் கெபுபரா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகமானது 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
இன்றைய தினத்தை பொறுத்த வரை மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது...
இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும், இன்றும் நாளையும் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது...
மிதிலி புயலால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது...