மீனவர் உயிரை குடித்த `மிக்ஜாம்' புயல்..சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் மிக்ஜாம் புயலால் சுவர் இடிந்து விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். திங்கட்கிழமை அன்று கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாரத் என்பவர் வீட்டில் இருந்த போது, எதிர்பாராத விதமாக மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பாரத் என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், மெரினா நீண்ட போராட்டத்திற்கு பின்பு அவரை சடலமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்