"பூம்பாறை கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர நடவடிக்கை" - அமைச்சர் சேகர்பாபு

x

பழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூம்பாறை கோயிலுக்கு ராஜகோபுரம், கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என எம்.எல்.ஏ செந்தில் கேள்வி எழுப்பினார்... இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, பூம்பாறை பகுதியில் உள்ள கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டித் தரப்படும் என்றும், 9 நிலை, 7 நிலை, 5 நிலை என திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், அதே போன்று பூம்பாறை கோயிலைப் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்