15 கிலோ மீட்டர் நடந்தே சென்று மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் ஆய்வு செய்தார். தாமரைக்கரை முதல் எலச்சிபாளையம் வரை 15 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்ட படி சென்ற அமைச்சர், மலைவாழ் மக்களுக்கு முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து, நோயாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தினை வழங்கி அமைச்சர்,

மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள, அப்பகுதி செவிலியருக்கு உடனடியாக கைப்பபேசி ஒன்றை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்