நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் கோவி.செழியன்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 2017-ஆம் ஆண்டு திமுக நடத்திய ரயில் மறியல் தொடர்பான வழக்கில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி, கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு, கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரம், மாநகர துணை மேயர் தமிழழகன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
Next Story