காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் உறுதி
மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 6 மருத்துவ கட்டிடங்களை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், மருத்துவத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுமூக தீர்வு எட்டப்பட்டு, விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story