"யார்ரா அவன் யூனிபார்ம் இல்லாம.. இறங்கு.. ஊது.. நல்லா ஊது.." - அதிர்ந்த பயணிகள்

x

யார்ரா அவன் யூனிபார்ம் இல்லாம.. இறங்கு.. ஊது.. நல்லா ஊது.." - ஓட்டுனது டிரைவரே இல்லையாம்.. அதிர்ந்த பயணிகள்

சிதம்பரம் பேருந்து நிலையத்தில், மினி பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் பயிற்சி எடுத்த நபருக்கு போலீசார், அபராதம் விதித்தனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில், சீருடை அணியாமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த நபரிடம், பேருந்தை வெளியே எடுக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் தாமதம் செய்ததால் அருகில் சென்று விசாரித்தபோது, அவர் ஓட்டுநர் உதவியுடன் பயிற்சி பெற வந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் பயிற்சி எடுத்ததற்காக மினி பேருந்துக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்