கிணற்றில் தண்ணீருக்கு பதில் பால்...அச்சத்தில் கிராம மக்கள் | Thoothukudi | Tamilnadu
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு, ஆழ்துளை கிணறு மூலம் தினமும் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அந்த வகையில், கிணற்றுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, ஆழ்துளை மோட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது, தண்ணீருக்கு பதிலாக, பால் போன்று வெண்மை நிறத்தில் வெளியேறிய தண்ணீரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஒரு வாரமாக பால் போன்றே தண்ணீர் வருவதால், இது பஞ்சத்திற்கான அடையாளம் என அச்சம் தெரிவித்துள்ள பால்பாண்டி, தண்ணீரின் நிற மாற்றத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story