கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய நள்ளிரவில் தொடரும் போராட்டம்..
சங்கரன்கோவில் அருகே கல் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், அரியூர் மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story