திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை... அலறியடித்து ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ
வடக்கு மெக்சிகோவின் நியூவோ லியோனில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்... காற்றின் வேகத்தால் மேடை சரிந்த நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
அலறி அடித்து ஓடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. குடிமக்கள் இயக்கம் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் உள்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும்அப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீட்டினுள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவித்தியுள்ளனர்.
Next Story