"எந்த நேரத்திலும் நடக்கலாம்.. மக்களை உடனே வெளியேத்துங்க"-தமிழகத்தில் 11 கலெக்டர்களுக்கு அவசர கடிதம்
மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர், வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர்,திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அதிகப்படியான தண்ணீர் மேட்டூர் அணையில் திறக்க வாய்ப்புள்ளதால், கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அறிவுறுத்தியதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story