மேட்டூர் அணை பூஜையால் சர்ச்சை...தீக்குளிக்க ரோட்டுக்கு வந்த MLA - பதறிப்போன போலீஸ்...திடீர் பதற்றம்
மேட்டூர் அணை பூஜையால் சர்ச்சை
"ஒரு பொண்ணுக்கு 2 பேர் தாலியா?"
தீக்குளிக்க ரோட்டுக்கு வந்த MLA
பதறிப்போன போலீஸ்...திடீர் பதற்றம்
மேட்டூர் அணை 100 அடி எட்டியதற்கான பூஜையில், அதிகாரிகள் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, தீக்குளிக்க போவதாக எம்.எல்.ஏ. சொன்னதை கேட்டு அந்த இடமே பரபரப்பின் உச்சத்தில் இருந்தது...
இத்தனை கூச்சல், குழப்பம், களேபரத்திற்கு மரியாதை குறைச்சல் தான் காரணம் என்கிறார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம்..
மேட்டூர் அணை 100 அடி எட்டியதையொட்டி, நீர்வளத்துறை அதிகாரிகள் பூஜை செய்து தண்ணீரை வரவேற்றனர்..
இந்த பூஜைக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தன்னிச்சையாக பூஜை செய்து விட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் கோபமடைந்துள்ளார் எம்.எல்.ஏ. சதாசிவம்...
கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், நீர்வளத்துறை அதிகாரிகளான செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரை கண்டித்து மேட்டூர் - சேலம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்...
சீரியசாக சாலை மறியலில் ஈடுபட்ட அவரிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்த, மீண்டும் பூஜை நடத்தலாம் என கூற ஒரு பொண்ணுக்கு இரண்டு முறை தாலி கட்டுவீர்களா என கொதித்தெழுந்தார்...
அத்துடன் சாலை மறியல் வாக்குவாதமாக உருவெடுக்க, அதிகாரிகள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என எகிறிய எம்.எல்.ஏ. போலீசுக்கு இதுவரை நான் ஏதேனும் தொந்தர-வு கொடுத்திருக்கிறேனா? என நியாயம் கேட்டார்..
அவரது ஆதரவாளர்களும் தங்கள் தரப்பில் கேள்விகளை எழுப்பினர்...
ஒரு கட்டத்தில் கொதித்து போன அவர், தீக்குளிக்க போவதாகவும் தலைவரிடம் கூறிவிட்டதாகவும் பகீர் கிளப்பினார்..
இப்படியே நீண்ட நேரமாக வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருக்க தமிழக அரசுடன் ஒன்றியுள்ள தனக்கே இந்த நிலையா என ஆதங்கப்பட்டார்..
பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசம் செய்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன் பின்னரே பரபரப்பு தணிந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது..