சென்னை அருகே சிக்கிய பார்வை திறனை பறிக்கும் கொடூர மெத்தனால் - அச்சத்தில் மக்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பன்னாட்டு ஆலைகள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மெத்தனால் பாட்டில்கள் மொத்தமாக கொட்டப்பட்டது குறித்த தகவலின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளச்சாராயம் அல்லது போலி மதுபானம் தயாரிப்பதற்கு மெத்தனால் பயன்படுவதால், யாரேனும் அவற்றை பதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மெத்தனால் பாட்டில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்