காப்பகத்திற்கு அருகிலேயே புதைக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்.. - சிகிச்சை பெற்றவர்கள் நிலை என்ன?
குந்தலாடி பகுதியில் அங்கீகாரமின்றி மனநல காப்பகம் இயங்குவதாக கிடைத்த புகாரின் பேரில், கடந்த ஒன்பதாம் தேதி அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அங்கீகாரம் பெறாமலும், காப்பகத்தில் உள்ளவர்கள் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மேலும் காப்பகத்தில் இறந்தவர்கள் அருகில் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. இதுதொடர்பாக காப்பக உரிமையாளர், பொதுமக்கள், மாவட்ட மனநல மருத்துவரிடம் விசாரணை நடத்திய போலீசார், காப்பகத்தை நடத்திய அகஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காப்பகத்தில் இறந்தவர்கள் குறித்தும், இதற்கு முன் தங்கியிருந்தவர்களின் நிலை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story