"தமிழகம்தான் எங்களோடு பேசுவதற்கு தயாராக இல்லை" - கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேட்டி

x

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தோடு பேச தயாராக இருப்பதாக கூறிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழகம்தான் பேச தயாராக இல்லை என்றார்.

கர்நாடகாவில் பருவமழையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபனி அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, காவிரிக்கும், வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாகினா பூஜை செய்யப்பட்டது. பூஜையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்றனர். அணைக்கு மலர் தூவி வணங்கினர். இதைத்தொடர்ந்து மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு அதிக பலன் இருப்பதாக கூறினார். அணை தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறிய சித்தராமையா, தமிழகம்தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்றார். அணையை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் உடனே கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவிடுவோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்