நிர்மலா சீதாராமன் பெயரில் மெகா மோசடி... அதிர வைத்த ஒற்றை பெண்மணி ... தலைசுற்ற வைக்கும் பின்னணி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் பவித்ரா. தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் இவர், பெங்களூருவின் புறநகர் மற்றும் தமிழக-கர்நாடக எல்லைகளில் வசித்து வரும் கிராம மக்களை சந்தித்ததாகவும், அவர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் தனது அறக்கட்டளைக்கு கணிசமான தொகை வரவிருப்பதாக சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, வட்டியில்லா கடன் வழங்க இருப்பதால், அதற்கு முன்பணம் டெபாசிட் செய்ய வேண்டுமென கூறி மக்களிடம் சுமார் 17 கோடி ரூபாய் பணத்தை பவித்ரா வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. பணத்தை டெபாசிட் செய்த மக்கள், நீண்ட நாள்களாகியும் எந்தவொரு பணமும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த நிலையில், பவித்ரா மீது பெங்களூரு அத்திபெலே போலீசில் புகாரளித்தனர். இது குறித்தான விசாரணையை கையிலெடுத்த போலீசார், பவித்ரா உட்பட 13 பேர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கும்பல் கட்டுகட்டாக பண நோட்டுகளை வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது,


Next Story

மேலும் செய்திகள்