உயிரிழந்த மருத்துவ மாணவர் - அமைச்சர் நேரில் அஞ்சலி

x

ஜார்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டிற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். ஜார்கண்ட்டின் ராஞ்சியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நாமக்கல் மேலகவுண்டம்பட்டியில் உள்ள மதன்குமாரின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் மதிவேந்தன், 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும் அப்போது அவர், மதன்குமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்