மருத்துவ காப்பீட்டு திட்டம்.. "மக்களே மிஸ் பண்ணாதீங்க.." - அமைச்சர் கொடுத்த அசத்தல் அப்டேட்
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி, ஒரே நாளில் 100 தொகுதிகளில் மருத்துவ காப்பீட்டில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார். மேலும், அக்டோபர் மாதத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக 100 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story