தமிழகத்தில் மருத்துவ படிப்பு - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது...அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சேர, இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 80 ஆயிரத்திற்கு அதிகமானோர் தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் மாநில ஒதுக்கீட்டின் கீழ், 8 ஆயிரத்து 199 இடங்களும், பி.டி.எஸ் படிப்பில் 2 ஆயிரத்து 162 இடங்களும் நிரப்பபட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும், பல் மருத்துவ படிப்பிற்கு 38 இடங்களும் வங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்