"CM ஐயா தான் என் புள்ளய காப்பாத்தணும்.."காணாமல் போன மருத்துவ மாணவன்... கதறும் பெற்றோர்
ஜார்ஜியா நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்று, காணாமல்போன தனது மகனை கண்டுபிடித்து தரக் கோரி, மாணவரின் பெற்றோர் கண்ணீர் மல்க தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரித்திக் என்ற மாணவர், ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். 5-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருக்கும் அவர்,
விடுமுறை நாட்களில் தனியாக மலைகள், காடுகளுக்குச் சென்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த வாரம், அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்ற அவர், திரும்பி வரவில்லை என்று அங்குள்ள நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டில் உள்ள பெற்றோர், அவருடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ரித்திகை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரித்திஷ் காணாமல்போய் நான்கு நாட்கள் ஆன நிலையில், அவருடைய பெற்றோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.