தீர்மானத்தை பாதியில் நிறுத்திய மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்களுக்கு கார் வழங்கும் திட்டத்திற்கு மண்டல குழு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிகுப்பட்ட 200 வார்டுகளிலும், அடிப்படை வசதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய செல்லும் 6 நிலைக்குழு தலைவர்களுக்கும் இன்னோவா கார் வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண்டுக்கான எரிபொருள், ஓட்டுநருக்கான ஊதியம், பராமரிப்பு செலவு ஆகியவையும் வழங்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நிலைக்குழு தலைவர்களுக்கு கார் கொடுப்பதை மண்டல குழு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலைக்குழு தலைவர்களுக்கும், மண்டல குழு தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலைக்குழு தலைவர்களுக்கு கார் கொடுப்பது குறித்து அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு நடவடிக்கை எடுப்பதாக மேயர் பிரியா உறுதி அளித்தார்.