"அறிவிக்கப்பட்ட ரூ.10 கோடி எங்கே..? 8 மாதமாகியும் வஞ்சிக்கப்படும் விவசாயிகள்"
மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 கிராமங்களுக்கு மட்டும் குறைவான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதனிடம், காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், அதிகாரிகள் துணைபோவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story