ஒரு பையனுக்காக பஸ் ஸ்டாண்டில் பயங்கரமாக மோதி கொண்ட இளம்பெண்கள் - அதிர்ச்சி வீடியோ
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இரு இளம் பெண்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. தரங்கம்பாடியில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது... அந்த இளைஞருடன் பழக்கத்தில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிரின்டிங் ப்ரஸ்ஸில் பணியாற்றும் வேறொரு இளம் பெண்ணுக்கும், நர்சிங் மாணவிக்கும் இடையே பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கி குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர். பொதுமக்கள் போராடி சண்டையை விலக்கினர்... இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.
Next Story