`அய்யோ என் நகையெல்லாம் போச்சே' - போலீசையே கிறுகிறுக்க வைத்த கில்லாடி தம்பதி - காத்திருந்த ட்விஸ்ட்
மயிலாடுதுறை அருகே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மூவலூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மணிகண்டன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை மற்றும், ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2 சவரன் நகை மற்றும் 74,000 ரூபாய் ரொக்கத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததோடு, 9 சவரன் நகையை அடமானம் வைத்து பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன், வளர்மதி தம்பதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், பொய் புகார் அளிப்பவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Next Story