விவசாயத்திலும் கால் பதித்த வடமாநில தொழிலாளர்கள்..! அடியோடு மாறும் தமிழகம் | Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாவட்டத்தில், சம்பா, தாளடி, குறுவை சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வடமாநில ஆண் தொழிலாளர்கள் சம்பா நடவு நாற்றுப்பறித்து, அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 11 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள், நடவு பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க, பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக, நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர்.
Next Story