10 நாளுக்கு முன் காதல் திருமணம்...வெளிவந்த இளைஞரின் உண்மை முகம்...அதிர்ச்சி வாக்குமூலம்

x

மயிலாடுதுறை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் அருகே நடந்து சென்ற மலர்க்கொடி என்பவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயபாலனை கைது செய்தனர். அவர் கீழையூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலிசெயினை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. 10 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்த விஜயபாலன், ஆன்லைனில் வாங்கிய 6 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்