குளத்தை காணவில்லை என புகார் - ஆடிப்போன அதிகாரிகள்

x

மயிலாடுதுறை மாவட்டம் உளுத்து குப்பை ஊராட்சியில் நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து சரி செய்யும் முயற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமாரும் கிராம மக்களும் மேற்கொண்டனர். அப்போது, உளுத்துக்குப்பை கிராமம் எல்லையில், அரசு புறம்போக்கு வகைபாடுடைய குறிச்சி குளம் இருந்த‌தை ஆவணம் மூலம் கண்டுபிடித்தனர். ஆனால், குளம் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு விவசாய நிலமாக தனி நபர்கள் மாற்றி, சம்பா சாகுபடி செய்யும் பணி நடைபெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், ஆக்கிரமிப்பால் காணாமல் போன குளத்தை மீட்க‌க்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் வட்டாட்சியர் விஜயராணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்