நில அளவை செய்தபோது வெடித்த மோதல் - விஏஓ மீது பரபரப்பு புகார்
மயிலாடுதுறை அருகே திருவாளபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழரசன் என்பவரது நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக நில அளவை செய்தபோது விஏஓ நெப்போலியனுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தன்னை தாக்கியதாக தமிழரன் உட்பட 4 பேர் மீது காவல்நிலையத்தில் விஏஓ புகார் அளித்த நிலையில், தங்களை ஆபாச வார்த்தையில் பேசி, தாக்க முயற்சித்ததாக விஏஓ மீது ஆட்சியர் அலுவலகத்தில் தமிழரசன் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
Next Story