உயிருக்கே ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப்
உயிருக்கே ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப்
மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில், பொட்டவெளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் ஒரு பக்க பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிறுத்ததை அமைத்து தர அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் தெரிவித்தனர். தமிழக அரசு இந்த பேருந்து நிறுத்தத்தை புதிதாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story