ஊரே அதிர வெடித்த வெடி தொழிற்சாலை - ஒரே நேரத்தில் சிதறிய 2 உடல்கள்
மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டில், வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் கர்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், லட்சுமணன், கலியபெருமாள், குமார் ஆகிய மூன்று பேர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story