பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.42 லட்சம் தந்த பின் போனில் மிரட்டிய ISIS தீவிரவாத ஆதரவாளர்

x

மயிலாடுதுறையில், தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வசித்து வரும் ஹிதயத்துல்லாவின் 3வது மகன் ரிஸ்வானும், தஞ்சையைச் சேர்ந்த இப்ராஹிமின் மகள் ரமீஸ் பர்வீனும், கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர். ரமீஸ் பர்வீனுக்கு நஷ்ட ஈடாக 42 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதுடன், அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் விவாகரத்து தரப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரான இக்காமா சாதிக் பாட்ஷா என்பவர், விவாகரத்து தொடர்பாக ஹிதயத்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஹிதயத்துல்லா அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இக்காமா சாதீக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் ஐயூப்கான் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2022ம் ஆண்டு போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது கைதான இக்காமா சாதிக் பாட்சா மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்