கண் விழியை எடுக்க அடித்து கொண்ட இளைஞர்கள்.. மயான கொள்ளையில் திடீர் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றங்கரையில் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பருவத ராஜகுல மீனவ சமுதாயத்தினரால் 250 வது ஆண்டாக அங்காளம்மன் கோயில் மயானகொள்ளை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பாலாற்றங்கரையில், ராட்சத வடிவில் அசுரன் உருவம் அமைக்கப்பட்டு, அதன் மீது அங்காளம்மன் மற்றும் பூங்கரகம் 3 முறை வலம் வந்தது. பின்னர், அசுரனை காலால் மிதித்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அசுரனின் இரண்டு கண்களிலும் வைக்கப்பட்ட முட்டைகளை எடுப்பதற்காக இளைஞர்கள் கூட்டம் முண்டியடித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Next Story