சிறுதானியங்களை வைத்து மாஸ்டர் பிளான் - சொன்னால் புரியாது.. சுவைத்தால் மறக்காது..
பாரம்பரிய சிறுதானியங்களில் லட்டு தயாரித்து பெண் ஒருவர் அசத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபொழுது தனது குழந்தைகளுக்காக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களில் லட்டு தயாரித்து கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இதை ருசித்து பார்த்து நன்றாக இருப்பதாக கூறியதால், தற்போது இதை ஒரு தொழிலாக செய்து வருகிறார். தீபாவளி நெருங்கி உள்ளதால், பாரம்பரிய முறைப்படி தினை தேன் லட்டு, கம்பு லட்டு, பாசிபயறு லட்டு, கேப்பைலட்டு என ஏழு விதமான லட்டுகளை தயார் செய்து கல்லூரிகளுக்கும், இராஜபாளையத்தில் உள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலுக்கும் விற்பனை செய்து வருகிறார்.
Next Story