சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்ட 9 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலை நிறுவப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னையிலும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு திருத்தணியிலும், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு சென்னை காந்தி மண்டபம் வளாகத்திலும், மருது சகோதரர்களுக்கு சிவகங்கையிலும், அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடுவிற்கு கோவையிலும், தலா 50 லட்சம் மதிப்பீட்டில் சிலை நிறுவப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Next Story