வீடு புகுந்த மனோ தங்கராஜ் தம்பி.. ``வெளிய போடா பட்டி..''மலையாளத்தில் கதறிய பெண்

x

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் தம்பி, வீடு புகுந்து தாக்கியதாக பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அகிலா தேவியின் கணவர் முத்தழகன், டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெற்றுத் தருவதாக் கூறி, ஜெனித் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியதால், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் தம்பி ஜெயன் தங்கராஜ் மூலமாக அந்த பணத்தை ஜெனித் வாங்க முயற்சித்துள்ளார். ஜெயன் தங்கராஜ், முத்தழகனின் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கிய நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும் என்று அகிலா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்